RSS

நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக பிரவேச ஏற்பாடுகள் விறு விறுப்பாகியுள்ளன.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2M9IUIvBdJPodgUHmAkhCLzp9PlJg75dnKteV2_BdmD-tWTT3kBHK284CwTCBohAhsnLYcTiTm2ffq-UlzYUT9XGy5L6mzgVTBXe7mm0ZVinHCxnyH95ewYDTVk8snHrR-vzgF8jate8/s1600/Vijay_Kavalan_Pressmeet_stills_photos_02.jpgநடிகர் விஜய் அரசியல் பிரவேச ஏற்பாடுகள் விறு விறுப்பாகியுள்ளன. சட்ட மன்ற தேர்தலுக்கு முன் புது கட்சியை அறிவிக்கிறார். விஜய் ரசிகர் மன்றம் ஏற்கனவே மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. அதற்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். கிராமப்புறம் வரை மக்கள் இயக்க கிளைகள் உருவாக்கப்பட்டன.
 இதன் மூலம் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி ஆதரவு திரட்டப்பட்டன. விஜய்யே நேரடியாக இறங்கி உதவிகளை வழங்கினார். இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டன. ஏழை பெண்களுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது. 108 பசு தானம், கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு உதவி என மக்கள் பணிகள் தொடர்கிறது. அரசியலில் ஈடுபடுவதற்காகவே இவை நடந்தன.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து விஜய்யை அரசியலில் ஈடுபடும்படி வற்புறுத்தி தந்திகள் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் 25 ஆயிரம் தந்திகள் வந்துள்ளனவாம்.
இதை தொடர்ந்து ரசிகர் மன்ற நிர்வாகிகளை இரு வாரத்துக்கு முன்பு நேரில் அழைத்து பேசினார். ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக அரசியலில் ஈடுபடலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அரசியல் கட்சிக்கான வேலைகள் தீவிரமாக துவங்கியுள்ளன.
மாநாடு நடத்தி புது கட்சியை அறிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். பொங்கலையொட்டி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. பல்வேறு மாவட்டங்கள் மாநாட்டுக்காக பரிலீசிலிக்கப்பட்டன. இறுதியாக திருச்சியில் நடத்த முடிவாகியுள்ளது. மாநாட்டுக்கு அனைத்து ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கானோரை வர வழைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
கட்சி பெயர், கொடி போன்றவை குறித்து முக்கியஸ்தர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். திராவிட என்ற வார்த்தை இடம் பெறும் வகையில் கட்சி பெயரை உருவாக்குகின்றனர். கொடியும் இரு வண்ணங்களில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மாநாட்டிலேயே கட்சிக்கு தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும் அறிவிக்கப்பட உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது பிற கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா? என்பது பற்றியும் மாநாட்டில் முடிவெடுத்து அறிவிக்கப்படுகிறது.
விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். எனவே தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு விஜய் கட்சி ஆதரவு அளிக்கும் என்று யூகங்கள் கிளம்பியுள்ளன.
தேர்தலில் விஜய் போட்டியிட வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தியுள்ளனர். திருச்சி, கோவை ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய்க்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கணித்துள்ளனர். தேர்தலில் போட்டியிட்டால் திருச்சி தொகுதியில் நிற்பார் என்று தெரிகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment