RSS

இரு அணுமின் நிலையங்களை அமைக்க மலேசியா திட்டம்

கோலாலம்பூர் மலேசியாவில் இரு அணுமின் நிலையங்களைக் கட்டுவது குறித்து மலேசிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக மலேசிய எரிசக்தி துறை அமைச்சர் கூறியுள்ளார்.
1,000 மெகவாட் அணுமின் நிலையங்களைக் கட்ட மலேசியா திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
முதலாவது அணுமின் நிலையத்தை 2021-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க மலேசிய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இரு அணுமின் நிலையங்களைக் கட்டுவதற்கு என்னென்ன தேவை என்பது குறித்து 2013-ம் ஆண்டு அல்லது 2014-ம் ஆண்டுக்குள் மதிப்பிடப்படும் என்றும் எரிசக்தி துறை அமைச்சர் பீட்டர் சென் கூறியதாக பெர்னாமா தகவல் கூறியது.
மின்சார விநியோகிதத்திற்கு மலேசிய செயற்கை எரிபொருளையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது இந்த நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றும் திரு பீட்டர் சென் கூறினார்.
அணுமின் நிலையங்களைக் கட்டும் மலேசிய அரசாங்கத்தின் திட்டத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறை கூறியுள்ளனர். மின் உற்பத்திக்கு அரசாங்கம் வேறு வழிகளை ஆராயலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

Indujan said...

பதிவு மட்டும்தான் செய்கிறேன் கருத்துக்கள் குறைவே!

Philosophy Prabhakaran said...

நண்பா... ஒரு சின்ன அட்வைஸ்... இதுபோல செய்திகளை தொகுத்து வழங்குவது தேவையற்ற செயல்... ஒரு செய்தியை அப்படியே வெளியிடுவதற்கு பதிலாக, ஒரு செய்தியை வெளியிட்டு அதைப் பற்றிய உங்கள் கருத்தினை பதிவு செய்ய வேண்டும்... அப்படிச் செய்தால்தான் அது பதிவு... இல்லையெனில் வெறும் செய்தி...

தவறு இருப்பின் மன்னிக்கவும்...

Post a Comment