RSS

நம்பர் வன்னாகப்போகும் இண்டர்நெட் எக்ஸ்ப்லோரா 9

பொதுவாக இணையத்தில் உலாவ இண்டர்நெட் எக்ஸ்ப்லோராவை பயன்படுத்துவது குறைவு. நான்கூட பயன்படுத்துவதில்லை. ஆனால் இனி பயன்படுத்தவரும் போல தெரிகின்றது. ஏனெனில் மிக சிறப்பான வசதிகளுடன் Internet explore 9 வை Microsoft நிறுவனம் வெளியிட்டுள்ளது.


http://hardgeek.org/wp-content/uploads/2010/07/internet-explorer-9-image.pngஇது மிகவும் வேகமாக இயங்குமெனவும் சிறப்பான வரைகலை (கிராபிக்ஸ்) அனுபவத்தினை தரக்கூடியதெனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 சோதனைத்தொகுப்பு சுமார் 30 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

எச்.டி.எம்.எல் 5 தொழில்நுட்பத்தினையும் இது கொண்டுள்ளது.

இதன் வேகமான அதிக பாதுகாப்பான செயற்பாட்டிற்கு தாம் உத்தரவாதமளிப்பதாக மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

இதனோடு மைக்ரோசொப்டின் பிங் தேடல் தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது கூகுளிற்கு தகுந்த போட்டியளிக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பாவனையாளர்களின் விருப்பத்தெரிவில் உள்ள தளங்களை இயங்குதளத்தினுள் நுழையாமல் விண்டோஸ் டாஸ்க் பாரின் ஊடாக நுழைய முடியும்.

இயங்குதள சந்தையில் அதிக பங்கினை கொண்டுள்ள இன்டர்நெற் எக்ஸ்புளோரர் கடந்த சில வருடங்களாக பயர்பொக்ஸ் மற்றும் குரோமிடம் தனது பங்கினை இழந்து வருகின்றமை தெரிந்ததே. 


என்றாலும் என் கருத்துப்படி வளர்ச்சியடைந்துவரும் தொழில்நுட்ப உலகின்படி இதுவொன்றும் புதிதல்ல. 

மேலும் பதிவுகளை இடவேண்டுமாயின் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன். கிடைக்குமா?

Blogger Templates                                                                    







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

Indujan said...

Nice Post...

Post a Comment