RSS

பஞ்சாப் மாகாண ஆளுனர் கொலைக்கான பின்னணி அம்பலம்

மெய் பாதுகாவலரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பகிஸ்தான் பஞ்சாப் மாகாண ஆளுனர் சல்மான் டசீரின் கொலைக்கான பின்னணிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக 22 பேர் கொண்ட காவற்துறை விசேட குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

http://www.11news.us/wp-content/uploads/2011/01/Salman-Taseer-Profile.jpg
பகிஸ்தானின் அண்மை காலமாக சர்ச்சைக்குள்ளாகி வரும் மத துவேச சட்டம் குறித்து, ஆளுனர் முரண்பட்ட கருத்துக்களை பேசியமைக்காக அவர் கொல்லப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தனர்.

இந்த நிலையில் அவரை சுட்டுக் கொன்ற மெய்பாதுகாவளரான கர்தாரி, சரணடைந்ததுடன், அவருடன் சேர்ர்த்து மேலும் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுள், கர்தாரியின் சகோதரர்கள் 5 பேரும், அவரது தந்தையும், 3 உறவினர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கர்தாரி, பஞ்சாப் ஆளுனரை கொலை செய்யப் திட்டம் தீட்டியுள்ளமையை, ஏற்கனவே அவரின் உறவினர்கள் அறிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், முன்னாள் பாகிஸ்தானிய காவற்துறை மா அதிபர் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், கர்தாரி உள்ளிட்ட சிலர் அதி தீவிரவாத போக்கைக் கொண்டவர்கள்.

எனவே அவர்களை முக்கியஸ்த்தர்களுக்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கூற்று புறக்கணிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன என்று, பகிஸ்தானிய மக்கள் கட்சி கேள்வி  எழுப்பியுள்ளது.
 




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment